அணு உலைகளும்
ஆக்கிரமிப்பு நிலங்களும்
இதிகாசம் போல்
பதிவாகி போயின
ஒரு புறம்
பலன் ஏதும்
கிடைக்காமல்
பரிதவிக்கும்
மக்கள் கூட்டம்
பதறிக்கொண்டு
ஒரு புறம்
செவ்வானத்தையும்
வான் நிலவையும்
வர்ணிக்கும்
வர்கத்தினர்
ஒரு புறம்
பதவிக்கும்
பகட்டுக்கும்
அடிமைகளாய்
சிலர்
ஒரு புறம்
வருடந்தோறும்
சுனாமியை
வருட
இறுதியில்
நினைவு
கூறுவர்
ஒரு புறம்
அன்னையர் தினம்
மகளிர் தினம்
தந்தையர் தினம்
கொடி தினம்
என
தினங்களை
ஞாபகமூட்டுவர்
ஒரு புறம்
பருவத்தையும்
பருவமங்கையரையும்
இரசிக்கும்
காளையர்கள்
ஒரு புறம்
முதுமையில்
இளமையை
கழித்த
விதத்தை
பகிர்வோர்
ஒரு புறம்
வானொலி
தொலைக்காட்சி
பத்திரிக்கைகள்
முன்னேற்றம்
ஒரு புறம்
முற்போக்குவாதிகளும்
ஆன்மிகவாதிகளும்
மரவட்டைகளாய்
ஒரு புறம்
மருத்துவமும்
விஞ்ஞானமும்
பெருகியும்
பிணியும்
பற்றாக்குறையும்
ஒரு புறம்
சட்டங்களும்
திட்டங்களும்
ஆட்சியாளருக்கேற்ப
மாறும்
அலங்கோலம்
ஒரு புறம்
இத்தனை
புறங்களும்
ஒருங்கிணைந்திருக்க
என்றுமே
மாறாமல்
லப் டப்
ஓசையுடன்
இதயம்
மட்டும்
இட புறம்
மட்டுமே.
இன்றைய சூழலுக்கான அருமையான் கவிதை.
ReplyDeleteஅத்தனை புறங்களையும் தள்ளிவிட்டு இடதுபுறம் இருக்கின்ற இதயத்தின் லப் டப் ஓசையுடன் உங்கள் கவிப்பணி தொடர வாழ்த்துக்கள்.....
எம்.பி.
அத்தனை கவிதைகளையும் ஒரு புறம் தள்ளி விட்டு உங்கள் கவிதையை வாசித்து முடிதததும் என் இதயமும் ஆஹா என்று இட்து புறம் துடிக்கிறது!
ReplyDeletearumaiyana kavithai
ReplyDeleteநிகழ்கால சம்பவங்களைப் பற்றி நினைத்து மனம் கலங்கத்தோன்றுகிறது, இக்கவிதையை வாசித்தபின்! பாராட்டுக்கள்!
ReplyDelete கிரிஜா மணாளன்
Very nice
ReplyDeleteவணக்கம் அக்கா..
ReplyDeleteநான் மிகவும் ரசித்தேன் ..
இன்றைய சமுகம் நோக்கிய உங்களின் பார்வையின்
பிரதிபலிப்பு உங்களின் இந்த கவிதை...
வலுவான கவிதை ... வாழ்த்துக்கள்
ஒரு புறத்திலிருந்து மறு புறத்தை சுட்டி காட்டி இதய ஓசையில் ஒருங்கிணைத்த விதம் அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
Karthi Sampath
Fantastic!
ReplyDelete