Thursday, 11 December 2014

மயிலறகு



மயிலறகு
குட்டி
போடுமென்று
ஏமாற்றியபோதே
தெரிந்துக்கொண்டேன்
உன்
வார்த்தைகள்
அனைத்தும்
பொய்
என்று 

தேவதை


உன் கற்பனை 
கவிதையில் 
மட்டும் 
தேவதையாய் 
நான் 
நிஜத்தில் 
துர்தேவதையாக்கி 
நீ 
மந்திரவாதியாய் 
உருமாறுகிறாய் !!!!

துணிவு

நான் தானே
என்று கேட்க
எனக்கு தெம்பில்லை
நீதான்  என்று
சொல்ல உனக்கும்
துணிவில்லை
உன் கவிதை
பெண்
யாரடா ?