Sunday 11 December 2011

பாரதி நீ மீண்டும் பிறந்து வந்தால்

இங்கே எல்லாமே
தலைகீழ்விகிதங்களாய்
சிதைந்து கிடக்கிறது
பாரதி!
உன்னை முழுமையாய்ப்
புரட்டிப் பார்க்காமலேயே
நாங்கள்
பைந்தமிழ்க் கவிதைகளைப்
பரப்பிக் கொண்டிருக்கிறோம்
வாசித்தவற்றை சுவாசித்தே
மறுபதிப்புச் செய்கிறோம்

அச்சமில்லை அச்சமில்லை என்றாய்
இங்கே
அச்சப்படாமல் வாழ முடியாது பாரதி....
 அரசியல்வாதி தொடங்கி
ஆன்மிகவாதிவரை எங்களை
அச்சுறுத்தியே தங்களை
உயர்த்திக்  கொள்கிறார்கள்.
அச்சப்பட்டு அச்சப்பட்டே
நாங்கள் இப்போது
அடிமைகளாய் மாறிப்போனோம்.

மோதி மிதித்துவிடு பாப்பா என்றாய்
பாப்பாக்களை
புத்தகச்சுமையும் வீட்டுப் பாடங்களும்
 மோதித் தள்ளிவிடுகின்றன!!
 பாப்பாக்களோடு சேர்ந்து
மெட்ரிக் பள்ளிகளின்
கல்விக்கட்டணங்கள்  எங்களை
கசக்கிப் பிழிகின்றன.


எங்களுக்கும்
ஆசை அதிகம் பாரதி....
நீ பாப்பப் பாட்டு
குயில் பாட்டு பாடினாய்...
நாங்கள்
மம்மி பாட்டிலும் டாடி பாட்டிலும்
சுகம் காண்கிறோம்.

சாதிகள் இல்லையென்றாய்  நீ...
சாதியில்லை என்றால் இங்கே
சலுகைகள் கிடைக்காது பாரதி!!!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக
நீ சினங்கொண்டு சீரினாய்.
ஆனால் நாங்களோ
ஈழப்படுகொலைகளையும்
போபால் மரணங்களையும்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.


பத்துப் பன்னிரெண்டு
தென்னை மரங்களும்
ஒரு பத்தினிப் பெண்ணும்
 கேட்டவன் நீ !!!!!!
இங்கோ,
பத்துப் பன்னிரெண்டு
பண்ணை வீடுகளும்
வீட்டுக்கொரு மனைவியும், துணைவியும்
பத்தினிகளாக
வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்!!!!!!


நிமிர்ந்த நடையும்
நேர் கொண்ட பார்வையும்
நானிலத்தில் பெண்களுக்கு
வேண்டும் என்றாய்...
இன்றையப் பெண்களிடம்
இரண்டுமே நிறைய இருக்கின்றன
ஆனால்,
சீரழிவை நோக்கியல்லவா
சென்றுக் கொண்டிருக்கின்றன!!!!!


சிங்களத்தீவினுக்கோர் பாலம்
அமைப்போம் என்றாய்...
நாங்களும்
தமிழர்களைக் கொன்று குவித்து
சிங்களவனோடு உறவுப்பாலம்
அமைக்கிறோம்!!!!!


நீ மீண்டும் பிறந்து வந்தால்,
உன்னைப் பைத்தியம் என்று
பட்டம் சூட்டி
உன் நெம்புகோல் கவிதைகளை
முறித்துப்போட
அரசியல்வாதிகளும் ஆன்மிகவாதிகளும்
அணி திரண்டு விடுவார்கள்!!!!!
 வேண்டுமானால்
அவர்களைத்  துதிபாடி  நீ
சில விருதுகளைப் பெறலாம்!
திரைப்பட இசைக்கும்
நடிகைகளின் அசைவுக்கும்
பாட்டெழுதி
நீ திரவியம் தேடலாம் பாரதி!!!!!!!!

(சென்ற வருட பாரதியார் நினைவு நாளில் (2010 ) பரிசு கிடைத்தது )
வளரி மற்றும் தமிழ் தென்றல் குழுமம்  ஆகியவற்றில் வலம் வந்தது,
நன்றி. திரு.அருணா சுந்தரராசன் ,      திரு.கிரிஜாமணாளன்.


 
  
 
   .
  


 
 
 
  



 
   
     








 
  

  


  









 






    
  
 
  



  
  

  
  
 
 
  
 
       
 

5 comments:

  1. யாமறிந்த கவிதாயினிகளிலே எங்கள் அன்புக்குரிய சேலம் சுமதி அவர்கள். உண்மையிலேயே பாரதி கனவு கண்ட புதுமைப்பெண்! இக்கவிதையின் வரிகளிலேயே அவரது துணிச்ச்சலும், வீரமும் தெரிகிறது!
    பாராட்டுக்கள்!

    - கிரிஜா மணாளன்
    Editor/www.smspoets-tamil.blogspot.com

    ReplyDelete
  2. சமுதாய சீரழிவினை....ஆதங்கத்தோடு..சாடியிருக்கிறார்.பாரதியின் கருத்துக்கு எதிர்மறையாக...சமுதாயம் செயல்படுவதை.யும்,ஒரு கட்டத்தில் இன்று பாரதிக்கே..பைத்தியக்கார பட்டம் கட்டிவிடுவார் என்பது தான் உச்சம்.///பாரதி!
    உன்னை முழுமையாய்ப்
    புரட்டிப் பார்க்காமலேயே
    நாங்கள்
    பைந்தமிழ்க் கவிதைகளைப்
    பரப்பிக் கொண்டிருக்கிறோம்
    வாசித்தவற்றை சுவாசித்தே
    மறுபதிப்புச் செய்கிறோம்////
    முற்றிலும் மறுக்க முடியாத உண்மைங்க...
    கவிதாயினிக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

    _ம.இராம சுப்பிரமணியராஜா

    ReplyDelete
  3. வாசித்தவற்றை சுவாசித்தே
    மறுபதிப்புச் செய்கிறோம்

    அருமையான சாடல்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அருமை அருமை

    ReplyDelete