Saturday 24 December 2011

ஒரு புறம்


    

  அணு உலைகளும்
  ஆக்கிரமிப்பு நிலங்களும்
   இதிகாசம் போல் 
   பதிவாகி போயின 
   ஒரு புறம் 

   பலன் ஏதும் 
   கிடைக்காமல் 
   பரிதவிக்கும்
   மக்கள் கூட்டம் 
   பதறிக்கொண்டு 
   ஒரு புறம் 

   செவ்வானத்தையும் 
   வான் நிலவையும்
   வர்ணிக்கும்
   வர்கத்தினர் 
   ஒரு புறம்
  
   பதவிக்கும்
   பகட்டுக்கும்
   அடிமைகளாய்
   சிலர் 
   ஒரு புறம் 


   வருடந்தோறும் 
   சுனாமியை 
   வருட 
   இறுதியில்
   நினைவு 
   கூறுவர்
   ஒரு புறம்


  அன்னையர் தினம்
  மகளிர் தினம்
  தந்தையர் தினம்
  கொடி தினம் 
  என 
  தினங்களை
  ஞாபகமூட்டுவர் 
  ஒரு புறம் 

 
  பருவத்தையும்
  பருவமங்கையரையும்
  இரசிக்கும்
  காளையர்கள்
  ஒரு புறம்


   முதுமையில்
   இளமையை
   கழித்த
   விதத்தை
   பகிர்வோர் 
   ஒரு புறம்
 
    வானொலி
    தொலைக்காட்சி
    பத்திரிக்கைகள்
    முன்னேற்றம்
     ஒரு புறம்

 
     முற்போக்குவாதிகளும்
      ஆன்மிகவாதிகளும்
      மரவட்டைகளாய் 
      ஒரு புறம்


     மருத்துவமும்
     விஞ்ஞானமும்
     பெருகியும்
     பிணியும்
     பற்றாக்குறையும்
     ஒரு புறம்
     
     சட்டங்களும்
     திட்டங்களும்
     ஆட்சியாளருக்கேற்ப
     மாறும்
     அலங்கோலம்
     ஒரு புறம்


     இத்தனை
     புறங்களும்
     ஒருங்கிணைந்திருக்க 
     என்றுமே 
     மாறாமல்
     லப் டப்
     ஓசையுடன்
     இதயம் 
     மட்டும்
     இட புறம்
     மட்டுமே.

    

 

8 comments:

  1. இன்றைய சூழலுக்கான அருமையான் கவிதை.

    அத்தனை புறங்களையும் தள்ளிவிட்டு இடதுபுறம் இருக்கின்ற இதயத்தின் லப் டப் ஓசையுடன் உங்கள் கவிப்பணி தொடர வாழ்த்துக்கள்.....

    எம்.பி.

    ReplyDelete
  2. அத்தனை கவிதைகளையும் ஒரு புறம் தள்ளி விட்டு உங்கள் கவிதையை வாசித்து முடிதததும் என் இதயமும் ஆஹா என்று இட்து புறம் துடிக்கிறது!

    ReplyDelete
  3. நிகழ்கால சம்பவங்களைப் பற்றி நினைத்து மனம் கலங்கத்தோன்றுகிறது, இக்கவிதையை வாசித்தபின்! பாராட்டுக்கள்!


    ‍ கிரிஜா மணாளன்

    ReplyDelete
  4. வணக்கம் அக்கா..
    நான் மிகவும் ரசித்தேன் ..
    இன்றைய சமுகம் நோக்கிய உங்களின் பார்வையின்
    பிரதிபலிப்பு உங்களின் இந்த கவிதை...
    வலுவான கவிதை ... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஒரு புறத்திலிருந்து மறு புறத்தை சுட்டி காட்டி இதய ஓசையில் ஒருங்கிணைத்த விதம் அருமை.
    வாழ்த்துக்கள்!
    Karthi Sampath

    ReplyDelete