Thursday, 12 April 2012

காதல்

மனதில்
உள்ள
காதலை
சொல்லாமல்
தவிக்கிறேன்
கருவை
சுமப்பதற்கு
சமமாய்
தேர்வு
எழுதினால்
தோற்றுப்
போய்
விடுவோமோ
என்ற
அச்சத்தைப்
போல்
எத்தனை
நாட்கள்
கருவை
சுமப்பேன்
பிரசவித்து
தானே
ஆக
வேண்டும்
வெற்றி
தோல்வியைத்
தாண்டி
காதல்
வழி
நடத்துகிறது
காதலை
உணர்கின்ற
தருணமும்
காதலோடு
வாழ்கிற
தருணமும்
அற்புதமானது
தூது
விடுகிறேன்
நவீன
யுகத்தில்
பாதுகாப்பாய்
ஏற்பாய்
என்ற
எதிர்பார்ப்புடன்
எதிர்ப்பாயா??
எதிர்கொள்வாயா????
 
 (வளரி  இதழில் பிப்ரவரி  2012  இல் வெளிவந்தது )                
   
    
              
 

ஓவியம்

அன்பு
என்ற
ஓவியம்
அழகானது
ஒரு
முறை
கை
தவறி
அதன்
மீது
கறை
படிந்துவிட்டால்
கை
தேர்ந்த
ஓவியராக
இருந்தால்
மட்டுமே
சரி
செய்ய
முடியும்
        
         
 

சவுக்கு

சிலுவையை
சுமந்து
பயணித்த
போதும்
ஆணியால்
அறைய
பட்ட
போதும்
வலியை
பொறுத்துக்
கொண்ட
நீ
அவன்
வார்த்தை
சவுக்கின்
சுழற்றலை
தாங்கும்
சக்தியை
எனக்கு
பரிசளிப்பாயா????
 
    
   
 
     
 

நடிகை

தாய்
இறந்த
செய்தி
அறிந்தும்
அழ
முடியாமல்
பிணமாக
படுத்திருந்தால்
துணை
நடிகை  
       

சட்டம்

இனிக்க
இனிக்க
பேசி
இன்பமாய்
கழித்த
பொழுதுகளில்
வாக்குறுதிகளுக்கு
பஞ்சமில்லை
உன்னிடம்
இன்று
பேசுவதற்கே
தடா
சட்டம்
போட்டுவிட்டதோ
உன் 
நாக்கு
  
  
     
  


     
 

Monday, 9 April 2012

கீழும் மேலும்


 கீழும்
மேலுமாய்
மேலும்
கீழுமாய்
திரும்ப
திரும்ப
படித்தும்
புலப்படவில்லை
மேகங்களுக்குள்
மறைந்து
வெளிவரும்
நிலவை
போல்
நீ
எழுதிய
கவிதையும் 

          

மூன்றாம்பிறை

மூன்றாம்பிறை
முழுமதி
பட்டாம்பூச்சி
அனைத்துடனும்
ஒருமைப்படுத்தி
வெளிப்படுத்துகிறாய்
உன்
காதலை
தேய்பிறையாய்
தேய்ந்து
கொண்டிருக்கும்
அவளிடம் 
         

Thursday, 5 April 2012

தரம்

வீணை
மீட்ட
ஆசைப்பட்டேன்
ஸ்ருதி
சேரவில்லை
நடனம்
ஆட
நினைதேன்
பதம்
வரவில்லை
பாட
பழகி
பக்குவம்
அடையவில்லை
அழகாய்
வாழ
வழி                              
தேடினேன்
தரமாய்
கிடைத்தாய்
நீ
                 
    

வரம்

மலடி
என்ற
பழிக்கு
குழந்தை
வரமில்லை
கேட்காமல்
கிடைக்கிறது
குப்பையில்
வீசும்
தாய்க்கு

    
     

 

சுனாமி

உன்னிடம்
சரண்
அடைந்திருக்கும்
மீன்களை
கொல்வதால்
நர
மாமிசம்
உண்ண
ஆசைப்பட்டது
தான்
சுனாமியோ????
   
      

விட்டில்பூச்சி

விளக்கை
தேடி
போகிறது
சேய்
விட்டில்பூச்சி
அது
அறியவில்லை
கீழே
கிடக்கும்
சாம்பல்
தன்
தாயுடையது
என்று
  
         

ஏழாவது அறிவு

என்னுள்
கிளர்ந்தெழும்
எண்ணங்கள்
யாவும்
புதைந்தபடி
திறவுக்கோலாய்
செயல்பட
நினைக்கிறது
ஏழாவது
அறிவு.       

தழும்பு

உன்னால்
ஏற்பட்ட
ரணங்கள்
மாறிப்
போனது
தழும்பாக
மருந்திட
இப்போது
வருகிறாய்
கண்கெட்ட
பிறகு
சூரிய
நமஸ்காரம்
செய்வது
போல்.     
        


 

பிரதிபலிப்பு

யாரோ
எழுதிய
கவிதைகளில்
என்
மன
பிரதிபலிப்பு
யோசித்து
பார்கின்றேன்
இது
நான்
நேற்று
மனதிற்குள்
பேசி
பார்த்த
வார்த்தைகள்
அல்லவா ??   


          

Wednesday, 28 March 2012

கவிழ்ப்பு

 உன்
 முன்
 தலை
 நிமிர்த்தி
 நான்
 பேச
 வரும்
 பொழுதெல்லாம்
  நீ
 ஏன்
 அடிக்கடி
 தலை
 கவிழ்கிறாய்
 ஒலிவாங்கியே     
    

பெரிசு

தோளிலும்
மார்பிலும்
தூக்கி
சுமந்த
தந்தை
இன்று
பெயர்
எடுக்கிறார்
மகனிடம்
அந்த
பெரிசு
என்று        

ஊன்றுகோல்

தசைகள்
தளர்ந்தாலும்
மூன்றாம்
காலாக
ஊன்றுகோலையும்
முதல்
கையாக
தன்னம்பிக்கையுடனும்
இன்றைய
மூத்த
குடிமகன்கள்        

சம்சாரி

இளங்கலை
கடந்து
முதுகலை
முடிப்போம்
முடிந்துவிட்டது
அத்தனை 
கலைகளும்
இங்கே
வந்துவிட்டது
முதுமையும்
இன்று
வரை
கிடைக்கவேயில்லை
சம்சாரி
பட்டம்             
 

நகரத்து மனைவி

கண்டாங்கி
சேலைக்
கட்டி
படிய
படிந்த
தலை
வாரலுடன்
 நெற்றியில்
எடுப்பாய்
குங்கும
போட்டிட்டு
மூக்குத்தி
மின்ன
டோலாக்கு
ஆட
கொலுசு
சத்தம்
இனிமையாய்
காதில்
ஒலிக்க
கிராமிய
பாடல்
பாடிக்
கொண்டு
அத்தான்
என்று
அழைத்தவளை
ஏறெடுத்து
பார்க்கையிலே
டியர்
பெட்
காபி
என்று
கையில்
ஆங்கில
செய்தித்
தாளுடன்
இரவு
உடையில்
கனவை
கலைத்து
நின்றால்
நகரத்து
மனைவி
                    
             
 
     

 

Tuesday, 27 March 2012

இனவெறி

காக்கையும்
கழுகும்
ஒரே
கூட்டில்
இனவெறியில்லாமல்
தொலைக்காட்சி
கருத்துப்
படத்தில்
மட்டும்











Saturday, 24 March 2012

புதைப்பு

மனதில்
எழும்பியது
ஆசை
குழித் 
தோண்டி
புதைக்கின்றேன்
பின்
தொடர்கிறது
நிறைவேறா
ஆசைகள்



Wednesday, 21 March 2012

கரை

நீயோ
அக்கரையில்
வாசம்
நானோ
அககறையில்
உன்
வசம்
எக்கரையிலும்
கேட்கவில்லை
உன்
குரல்
இக்கரையில்
மௌன
மொழி
பேசுகிறேன்
எக்குறை
கண்டாயோ
என்னிடம்
ஏதும்
அறியாமல்
உறைந்து
போய்
நிற்கின்றேன்

துடைப்பான்

கரும்பலகையாய்
உன்
மனம்
துடைப்பானாய்
நான்
உருமாறினேன்
நிறம்
மாற
மறுக்கும்
ஜட
பொருளாய்
நீ


ஆட்டம்

நிஜ
கால்களுடன்
ஆடுகிறான்
பொய்க்கால்
குதிரை
ஆட்டத்தில்
கலைஞன்

  

உருவம்

உன்னை
நினைக்க
வேண்டாம்
என்று
நினைக்க
நினைக்க
உன்
உருவ
ஒற்றுமையுடன்
எதிரில்
கடந்து
போகும்  
உருவத்தால்
மீண்டும்
நினைக்க
வைக்கிறது
உன்
அன்பை.

Tuesday, 20 March 2012

காந்தியம்

பண்டிகைக்
காலங்களில்
மட்டுமே
நீயும்
கதரும்
நினைவுக்கு
வருகிறீர்கள்
நீ
மேல்
சட்டையை
ஏழைகளின்
நிலை
கண்டு
துறந்தாய்
இன்று
மேலாடைகள்
விளம்பரங்களுக்காகவும்
கவர்ச்சி
அணிவகுப்புக்காகவும்
களையப்படுகின்றன
கொலையும்
கொள்ளையும்
தலை
விரித்தாடுகின்றன
காந்தியம்
பேசிய
உதடுகள்
இன்றைக்கு
கோட்சேயிசம்
பேசுகின்றன
(வார்ப்பு.வலைதளத்தில் 2011 இல் வெளியானது)


.




ஊடல்

கலிங்கத்துபரணியாய்
ஆரம்பிக்கும்
நம்
ஊடலில்
இறுதியில்
ஜெயிப்பது
இருவருமே








மெத்தனம்

உன்
வரவால்
வலையிலிருந்து
தப்பிய
மீன்கள்
போல்
என்
விழிகள்
உயிர்
பெற்றன
கால்கள்
மான்களாயின
இதயம்
இரங்கராட்டினமாய்
அத்தனை
மாற்றங்களும்
வேகமாய்
நீயோ
எனக்குள்
ஆமையாய்!!!!






முத்தம்

சாலையோரம்
கைப்பிடித்து
பதித்த
முதல்
முத்தம்
திரையரங்கு
இருட்டில்
அவசரமாய்
தித்தித்த
முத்தம்
மாடிப்படிகளில்
மறைந்து
மலர்ந்த
முத்தம்
அறையில்
அத்து மீறி
ஆசையில்
அளித்த
முத்தம்
குறுஞ்செய்திகள்
வாயிலாய்
கைப்பேசியில்
கொடுத்த
கணக்கில்லா
முத்தங்கள்
நினைவில்லையா?
முத்தங்கள்
மொத்தமும்
மௌனமாய்
போனது
ஏனோ?
இதழ்கள்
பாலைவனமானது
முத்தங்கள்
கானல்
நீரானது
என்
அன்பே !!!!!!
   



இதயம்

கரையானாய்
அரிக்கிறது
இலவம்பஞ்சாய்
 வெடிக்கிறது
காணாமல்
போன
இதயங்களின்
சங்கமம்.

Friday, 16 March 2012

அத்தான்

சிறு
வயதில்
என்னை
சுற்றி
சுற்றி
வந்து
ஞாபக
சக்தி
அதிகரிக்க
நீ
கொடுத்த
வல்லாரை
கீரை
வருடங்கள்
பல
கடந்த
பின்னும்
ஞாபகமாய்
உன்னை
அழைக்க
வைக்கிறது
அத்தான்
என்று







Wednesday, 22 February 2012

வாழ்வு

மழை
வந்தும்
நனையவில்லை
வெயில்
பட்டும்
சுடவில்லை
வசதியான
வாழ்வு
எனக்கு
கருவறையில்

மதியூகி

மன
தாழ்
திறப்பாய்
என்று
மனதால்
மருகிய
என்னை
மண
தாள்
கொடுத்து
மதி
கெட
செய்து
மதி
யூகியாய்
மணவறையில்
நீ.


Monday, 20 February 2012

வைரஸ்

புதிய
அணுகுமுறை
முகநூல்
வழி
தூது
பற்றி
கொண்டது
காதல் வைரஸ்
     

நாம்

உன்னில்
நானும்
என்னுள்
நீயும்
ஒன்றிருக்கிறோம்
நாம்
 என்ற
தன்னம்பிக்கை
உணர்வுடன்
காதலில்
     

   

Wednesday, 8 February 2012

மொட்டுகள்

மொட்டுகளாய்
பரப்பப்பட்டிருந்த
ரோஜா
மலர்கள்
மலர்ந்து
விரிந்தன
விற்கும்
சிறுமியின்
முக
மலர்ச்சியை
பார்த்த
கணத்தில்

எதிர்பார்ப்பு

உன்
வருகையை
எதிர்பார்த்து
நான்
நின்ற
தருணங்களின்
வலியை
மௌன
குமுறலாய்
பறைசாற்றும்
என் 
வீட்டு
வாயிற்கதவு





குமுறல்

வண்ண வண்ண.
ரோஜாக்களை
கொடுப்பதிலும்
இதய சின்னத்தை
கழுத்தில்
தொங்க விடுவதிலும்
திரை அரங்கில்
பாப்கார்னையும்
பப்சையும்
கொறிப்பதிலும்
இரு சக்கர வாகனத்தில்
கட்டுப்பாடின்றி
சுற்றுவதிலுமே
.தெரிகிறது
நவீன காதல்.



 

Friday, 3 February 2012

புலம்பல்

புலம்பலை
கேட்டு
கேட்டு
அலுத்துப்
போன
காதுகளுக்கு
ஒலித்தது
கீரவானியாய்
குழந்தையின்
அப்பா
என்ற
அழைப்பு




எண்ணிக்கை

ஆருயிரே
என்று 
நீ
அழைத்த
பொழுது
எண்ணிக்கையாய்
நினைத்து
எள்ளி
நகையாடிய
என்னை
இன்று
ஈருயிரை
ஓருயிராக்கி
இல்லற
சாகரத்தில்
நீந்த
செய்கிறாய்


Tuesday, 31 January 2012

சாபம்

அகலிகைகளும்
மன்மதன்களும்
பெருகி
போனார்கள்
கலியுகத்தில்
கல்லாய்
சபிக்க
கௌதமர்கள்
குறைந்து
போனதால்



மறப்போம் மன்னிப்போம்

உயிரோடும்
உணர்வோடும்
போராடிய
போது
தலைக்காட்டவில்லை
உறவுகள்
உயிர்
பிரிந்த
பின் 
வந்து
பலா
பிசினாய்
ஒட்டிக்கொள்கிறார்கள்
சொத்திற்கும்
சுகத்திற்கும்
இயேசுவின்
வார்த்தைகள்படி
மறப்போம்
மன்னிப்போம்
என்று
செய்தவைகளை
எல்லாம்
மறந்து



தவிர்த்தல்

கைகள்
தவிர்த்து
கால்களால்
காதல்
கோலம்
போடுகிறேன்
உன்
முகம்
பார்த்த
பொழுதில்

காதல் அலை

கடற்கரையில் 
அமர்ந்து 
இருக்கையில்
நம் 
காதல்
அலையின்
அமைதியை
காணப்
பொறுக்காத
கடல்
அலை
பொங்கி
எழ
மறுக்கிறது
தன
சுயம் 
மறந்து







ஒற்றை புள்ளி

ஒற்றை
புள்ளியாக
இறுதியில்
இருந்த
என்னை
பல
புள்ளிகளுடன்
இணைத்து
வண்ண 
கோலமாக்கி
பார்த்து
வியக்க
நீ
அருகே
இல்லாமல்
பரிதவிக்குது
என்
மனம்
சிறகு
முளைத்தும்
பறக்க
முடியாத
வலிமையற்ற
பறவை
போல்



Monday, 9 January 2012

இடைவெளி

என்னில் நிறைந்து 
இருக்கிறாய் நீ.....
உன்னில் குறைந்து 
நான் போன 
காரணம் 
அன்பின்
இடைவெளியா ?
தொலைதூரத்தின் 
இடைவெளியா??????