Saturday, 5 November 2011

கண்ணாடி

   உனக்கும்  எனக்குமான  அன்பை
   உனக்கும்  எனக்குமான   உரையாடலை
   உனக்கும்  எனக்குமான    நட்பை
   எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும்
   கைக் குலுக்குவதையும்
   கைக் கோர்பதையும்
   கருப்பு கண்ணாடி என்ன
   வெள்ளை கண்ணாடி போட்டாலும்
   ஏழு வண்ணங்களிலும்
   கற்பனை குதிரையை தட்டி விடட்டும்
   என்ன வேண்டுமானாலும்
   நினைத்து  விட்டுப்  போகட்டும்
   தோள் கொடுக்கும் தோழனாகவும்
   தோள் சாயும்   தோழியாகவும்
   நம் தோழமை மிளிரட்டும் !!!!!
 

        


    

 
 
 

 
  
 


1 comment:

  1. நம் தோழமை மிளிரட்டும் !!

    கவிதை மிளிர்கிறது அழகாய்.

    ReplyDelete